ரமழானும் அல்குர்ஆன் மீதான கடமைகளும்
http://sukrymuhajiree.blogspot.com/2016/06/blog-post_1.html
ரமழானும் அல்குர்ஆன் மீதான கடமைகளும்
மனித சமுதாயத்தை இருளில் இருந்து விடுவித்து ஒளியின் பால் வழிகாட்ட வந்த இறைமறை அல்குர்ஆன் அல்உஷ்ருல் அவாகிர் என அழைக்கப்படுகின்ற ரமழானின் கடைசிப் பத்திலுள்ள ஓர் இரவிலேயே இறக்கியருளப்பட்டது.
ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் கலாமான அல்குர்ஆன் இறக்கியருளப் பட்டதன் காரணமாகவே ரமழான் மாதம் சிறப்புப் பெறுகிறது. அல்குர்ஆனில் இந்த மாதத்தைப் பற்றி வர்ணிக்கும்போது அல்லாஹ்,
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது” (ஸூரதுல் பகரா: 185) எனவும்
“நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்”(ஸூரதுல் கத்ர்: 01) எனவும் குறிப்பிடுகின்றான்.
எனவே, ரமழான் மாதம் அது குர்ஆனின் மாதம் அல்லாஹ்வின் வழிகாட் டல்கள் மனித சமூகத்திற்கு இறக்கியருளப்பட்ட மாதம். அதற்கு நன்றி சொல்லும் வகையிலேயே இந்த மாதம் முழுவதும் நாம் பசித்திருக்கிறோம் தாகித்திருக்கிறோம் இரவெல்லாம் நின்று வணங்குகின்றோம்.
உள்ளங்களை உசுப்பிய அல்குர்ஆன்
அல்குர்ஆன் இறக்கியருள்ளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இந்த உலகில் எத்தகைய பெரும் புரட்சிகளைச் செய்தது, அது நிகழ்த்திய சாதனைகள் என்ன, மனித உள்ளங்களில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை? என்பதையல்லாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உருவிய வாளோடு படுகொலை செய்யவந்த உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை இஸ்லாத்தின், நபிவர்களின் பாதுகாவலனாக மாற்றிய பெருமை அல்குர்ஆனைச் சாரும். ஆல்குர்ஆனின் ஓர் இரண்டு வசனங்கள் உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் உள்ளத்தில் அதிர்வை, தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது. ஈற்றில் அவர் மனிதப் புனிதனாக மாறுகின்றார்.
பக்தாதில் அன்று மிகவும் பேர் போன ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்த புழைல் இப்னு இயாழ் என்பவர் ஹரம் ஷரீபுடைய இமாமாக மாறினார் என்றால், அதற்குக் காரணம் ஓர் அல்குர்ஆனிய வசனம்தான்.
“ஈமான் கொண்டவர்களே! அவர்களுக்கு அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ் வையும் இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?” (ஸூரதுல் ஹதீத்: 16) என்ற அல்குர்ஆன் வசனம் ஏற்படுத்திய அதிர்வு புழைல் இப்னு இயாழுடைய முழு வாழ்வையுமே மாற்றியமைத்தது.
அதே அல்குர்ஆனைத்தான் நாமும் அணுதினமும் மீட்டி மீட்டி ஓதுகிறோம் பாராயணம் செய்கிறோம். அல்குர்ஆன் உமர் இப்னு கத்தாப் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வை எம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறதா? புழைல் இப்னு இயாழ் (ரஹிமஹுல் லாஹ்) போன்ற ஆயிரமாயிரம் உள்ளங்களை உசுப்பிய இந்த அல்குர்ஆன் எமது உள்ளத்தில் மாற்றத்தை, தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆரம்ப கால ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள், ஸலபுகள் அல்குர்ஆனின் மூலமாக அற்புதமான வழிகாட்டல்களைப் பெற்றார்கள். அதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக் கொண்டார்கள். அந்த மாற்றம் எங்களிடம் வர வேண்டும் என்றிருந்தால், நாம் அல்குர்ஆனை அணுகும் முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
அல்குர்ஆனை அணுகும் முறை
அல்குர்ஆனை அணுகுகின்ற ஒருவர் அது அல்லாஹவின் கலாம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அல்குர்ஆன் மனிதர்களின் வார்தைகள் அல்ல. இது உலகத்தைப் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காப்பாற்றுகின்ற அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற உணர்வு உள்ளங்களில் உயிரோட்டமானதாக, பசுமையானதாக இருக்கும் நிலையிலேயே அதனை ஓத வேண்டும் அதனை அணுக வேண்டும். அல்குர்ஆன் மனித உள்ளங்களுக்கு உணவளிக்கிறது சிகிச்சையளிக்கிறது என்ற உணர்வோடு அதனை நாம் அணுக வேண்டும்.
“இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும் அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்தோம்” (ஸூரதுல் இஸ்ரா: 82) என்று அல்லாஹ் சொல்கிறான்.
வாழ்க்கையில் கவலை, கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம், வேதனை, மன உளைச்சல்... அத்தனை பிரச்சினைகளுக்கும் அல்குர்ஆன் தீர்வு சொல்லும். ஆல்குர்ஆனில் அல்லாஹ் (ஷிபா நோய் நிவாரணி) என்ற வார்த்தையை இரண்டு இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றான்.
01. “அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கவல்ல) சிகிச்சை உண்டு.” (ஸூரதுந் நஹ்ல்: 68)
இங்கு தேனில் உடலியல் நோய்களுக்கான நிவாரணம் இருக்கின்றது என்று அல்லாஹ் சொல்கின்றான்.
02. “உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும் மரங்களிலும் உயரந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள் (என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கவல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.”(ஸூரதுந் நஹ்ல்: 68)
இங்கு உள நோய்களுக்கான நிவாரணத்தை அல்குர்ஆன் அறிமுகம் செய்கிறது. அல்குர்ஆன் நோய்களுக்கான நிவாரணி மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
இங்கு உள நோய்களுக்கான நிவாரணத்தை அல்குர்ஆன் அறிமுகம் செய்கிறது. அல்குர்ஆன் நோய்களுக்கான நிவாரணி மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும் நேர்வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”(ஸூரதுந் நஹ்ல்: 89)
அல்குர்ஆன் நேர் வழிகாட்டியாக, அரணாக, அருளை அள்ளிச் சொரியும் பொக்கிஷமாக, சுப செய்தியாகத் திகழ்கிறது.
அல்குர்ஆனுடனான உறவு உயிரோட்டம்மிக்கதாக இருக்க வேண்டும். அல்குர்ஆனின் அணுகும் ஒருவரின் எண்ணம் மிகத் தூய்மையானதாக இருக்க வேண்டும். அல்குர்ஆன் எனக்கு வழிகாட்டுகிறது, இதன் மூலம் எனக்கு நேர்வழி கிடைக்கிறது, அல்லாஹ்வின் ரிழா, மஹப்பா, திருப்தி, எனக்கு கிடைக்க வேண்டும் என்ற உணர்வோடு அல்குர்ஆனை அணுக வேண்டும்.
தீய எண்ணங்களோடு, பிழையான எதிர்பார்ப்புகளோடு அல்குர்ஆனை அணு கும் எவருக்கும் அது வழிகாட்டாது வெறும் சிந்தனைக்கு விருந்தாக அல்லது வாதப் பிரதிவாதங்களில், குதர்க்கங்களில் ஈடுபடும் நோக்கில் அலகுர்ஆனை அணுகுகின்றபோது அது உண்மையான வழிகாட்டலைத் தராது.
அல்லாஹ்வோடு உரையாடும் பாக்கியத்தையும் அதனை விளங்கிக் கொள் ளும் சந்தர்ப்பத்தையும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்ற நன்றி யுணர்வோடு அலகுர்ஆனை அணுக வேண்டும். அந்த உணர்வோடு அல்குர்ஆனை ஓதுகின்றபோது நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியின் வாயில்களைத் திறந்து தருவாதாக வாக்களிக்கின்றான்.
“உங்கள் இறைவன் (உங்களை நோக்கி இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக (நான் என்னுடைய அருளை) அதிகப்படுத்துவேன்...” (ஸூரா இப்ராஹீம்: 07)
நான் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இருக்கிறேன் அவனது கலாமை பாரா யணம் செய்து கொண்டிருக்கிறேன் அவனுக்கு முன்னால் நிக்கிறேன் என்ற உணர்வோடு அல்குர்ஆனை ஓத வேண்டும்.
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் அல்லாஹ் உங்களுடனே இருக்கின்றான்” (ஸூரதுல் ஹதீத்: 04) எனச் சொல்கிறது அல்குர்ஆன். மற்றறோர் இடத்தில்,
“மேலும் பிடரி நரம்பைவிட நாம் மனிதனுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம்” எனச் சொல்கிறது.(ஸூரதுல் காப்: 16)
ஆல்குர்ஆனை அணுகும் முறை குறித்து இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்:
“அல்குர்ஆனை தர்தீல் என்ற நிலையிலிருந்து ஓதுங்கள். அல்லாஹுத் தஆலா அவனது வசனங்களை ஓதிக் காண்பித்துக் கொண்டிருக்கிறான். அதனை நான் செவிமடுத்துக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வோடு அல்குர்ஆனை ஓதுங்கள்.”
இத்தகைய ஓர் உணர்வுபூர்வமான உறவு அல்குர்ஆனோடு ஏற்படுகின்ற போதுதான் அல்குர்ஆன் உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு), புழைல் இப்னு இயாழ் (ரஹ்) போன்ற சாமான்ய மனிதர்களை உருவாக்கும்.
“அல்குர்ஆனை தர்தீல் என்ற நிலையிலிருந்து ஓதுங்கள். அல்லாஹுத் தஆலா அவனது வசனங்களை ஓதிக் காண்பித்துக் கொண்டிருக்கிறான். அதனை நான் செவிமடுத்துக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வோடு அல்குர்ஆனை ஓதுங்கள்.”
இத்தகைய ஓர் உணர்வுபூர்வமான உறவு அல்குர்ஆனோடு ஏற்படுகின்ற போதுதான் அல்குர்ஆன் உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு), புழைல் இப்னு இயாழ் (ரஹ்) போன்ற சாமான்ய மனிதர்களை உருவாக்கும்.
முஹம்மத் இப்னு கஃப் அல்கர்னி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கி றார்கள்:
“யாருடைய கையில் அல்குர்ஆன் கிடைத்து விட்டதோ அல்லாஹ் அவனோடு நேரடியாகப் பேசினான் என்பதுதான் அதனுடைய பொருள்.”
“யாருடைய கையில் அல்குர்ஆன் கிடைத்து விட்டதோ அல்லாஹ் அவனோடு நேரடியாகப் பேசினான் என்பதுதான் அதனுடைய பொருள்.”
எனவே, அல்லாஹ் எம்மோடு பேசுகின்றான் உரையாடுகின்றான் என்ற மனோநிலையோடு அல்குர்ஆனை அணுக வேண்டும்.
அல்குர்ஆன் என்ன சொல்கிறது, அதற்கான பதில் எம்மிடம் இருக்கின்றனவா என்ற சிந்தனையோடு அல்குர்ஆனை ஓத வேண்டும்.
ஓதுகின்ற வசனம் அல்லாஹ்வின் ரஹ்மத் பற்றி பேசுகின்ற வசனமாக இருந்தால் அவனது அருளைக் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். ஓதுகின்ற வசனம் அல்லாஹ்வின் தண்டனை குறித்து பேசுகின்ற வசனமாக இருந்தால் அதிலிருந்து உடனடியாக பாதுகாப்புத் தேட வேண்டும். ஓதுகின்ற வசனம் ஒரு துஆவாக இருந்தால் அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். ஓதுகின்ற வசனம் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகின்ற வசனமாயின் அல்குர்ஆன் ஓதுவதை உடனடியாக நிறுத்தி ஸுஜூதில் வீழ்ந்து அவனைத் தூய்மைப் படுத்த வேண்டும்.
இத்தகைய அணுகுமுறைகளுடன் அல்குர்ஆனோடு தொடர்பு கொள் கின்றபோது அது மனிதனில் பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
“நபியே நீங்கள் அல்குர்ஆனை திருத்தமாக ஓதுங்கள்.” (ஸூரதுல் முஸ்ஸம்மில்: 04) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
அல்குர்ஆனை திருத்தமாக ஓதினால்தான் சிந்தனையோடு ஓதலாம். உணர்வுபூர்வமாக, நிதானமாக ஓதினால் அதன் அர்த்தத்தை உள்வாங்க முடி யும். அப்போதுதான் அது உள்ளத்தில் தாக்கம் செலுத்தும். வெறுமனே குர் ஆனை அவசர அவசரமாக ஓதுவதனால் இத்தகைய தாக்கத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
அல்குர்ஆனை திருத்தமாக ஓதுவது மாத்திரமல்ல, ராகமாகவும் அழகிய தொனியிலும் ஓத வேண்டும்.
“உங்களது குரல் வளத்தினால் அல்குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள்.” எனச் சொன்னார்கள் அமீருல் முஃமினீன் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
“அல்குர்ஆனை திருத்தமாக ஓதாதவர்கள் என்னைச் சார்ந்தவர்களல்ல.” என்று எச்சரித்தார்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
இவை அனைத்துக்கும் மேலாக குர்ஆனை அணுகுகின்றபோது ஒவ்வாரு வசனத்தையும் அதன் கருத்தை, அதன் பொருளை விளங்க வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக குர்ஆனை அணுகுகின்றபோது ஒவ்வாரு வசனத்தையும் அதன் கருத்தை, அதன் பொருளை விளங்க வேண்டும்.
“மேலும் அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களது உள்ளங்களிலே பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” (ஸூரா முஹம்மத்: 24) என்று அல்லாஹ் கேட்கிறான்.
“விளக்கமின்றிச் செய்கின்ற இபாதத்களிலும் தெளிவில்லாத அறிவிலும் ஆய்வில்லாமல், சிந்தனையில்லாமல் ஓதுகின்ற அல்குர்ஆனிலும் எவ்வித பயனுமில்லை.” என அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்.
தர்ஜுமானுல் குர்ஆன் என வர்ணிக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “ஸில்ஸால் மற்றும் அல்காரிஆ ஆகிய இரு சிறிய ஸூராக்களதும் கருத்தை விளங்கி, புரிந்து ஓதுவது ஸூரதுல் பகராவையும் ஸூரா ஆலுஇம்ரான் ஆகிய நீண்ட இரு ஸூராக்களை ஓதுவதையும் விட எனக்கு விருப்பத்திற்குரியதாகும்.”எனச் சொல்கிறார்கள்.
தர்ஜுமானுல் குர்ஆன் என வர்ணிக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் “ஸில்ஸால் மற்றும் அல்காரிஆ ஆகிய இரு சிறிய ஸூராக்களதும் கருத்தை விளங்கி, புரிந்து ஓதுவது ஸூரதுல் பகராவையும் ஸூரா ஆலுஇம்ரான் ஆகிய நீண்ட இரு ஸூராக்களை ஓதுவதையும் விட எனக்கு விருப்பத்திற்குரியதாகும்.”எனச் சொல்கிறார்கள்.
அல்குர்ஆனை ஓதுகின்றபோது உள்ளச்சத்தோடு ஓத வேண்டும் கவலை யோடு ஓத வேண்டும் கண்ணீர் வடித்து ஓத வேண்டும். முஃமின்கள் குர்ஆனின் வசனங்களைச் செவிமடுத்தால் அவர்களது நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது:
“முஃமின்கள் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பெயர் சொல்லப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுநடுங்கிவிடும். அல்குர்ஆன் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் மேலும் அதிகரிக்கும்.”(ஸூரதுல் அன்பால்: 02)
அல்குர்ஆனிய வசனங்கள் ஓதப்படுகின்றபோது இத்தகைய தாக்கம் நம்மில் ஏற்படுகிறதா என்று நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அஹ்லுல் கிதாப்கள் குறித்து அல்குர்ஆன் சொல்கின்றபோது,
“வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள். இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதியவர்களாக (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜதா செய்கின்றார்கள்.” எனக் குறிப்பிடுகின்றான்.
அல்குர்ஆனை ஓதுகின்றபோது இத்தகைய உணர்வு வர வேண்டும் கண்கள் கண்ணீர் சிந்த வேண்டும். அல்குர்ஆனுடன் இத்தகைய ஓர் உறவு பேணப்பட வேண்டும். நபியவர்கள் சொன்னார்கள்.
“அல்குர்ஆனை அழுதழுது ஓதுங்கள். அழுகை வரா விட்டால் அழுகையை வரவழைத்து ஒதுங்கள். அல்லது வலிந்து கண்ணீர் எடுத்து ஓதுங்கள். அல்லது அழுவது போன்று பாசாங்கு செய்யுங்கள்.”
“அல்குர்ஆனை ஓதுகின்றபோது கண் அழவில்லையாயினும் அவனுடைய உள்ளமாவது அழட்டும்” என்று சொன்னார்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்.
அல்குர்னை ஓதுகின்றபோது அழுகையை வரவழைப்பது எப்படி என்று இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்வதைப் பாருங்கள்:
“அல்குர்ஆன் ஓதுகின்றபோது அழுகை வர வேண்டுமாயின் குர்ஆன் விடுக்கும் எச்சரிக்கை மற்றும் வாக்குறுதிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அல்லாஹ் சுவனவாசிகளுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள், நரகவாதிகளுக்கு விடுத்திருக் கும் எச்சரிக்கைகள் என்பவற்றைப் பார்த்து நான் அல்லாஹ்வுடைய ஏவல்களில் எந்தளவு பொடுபோக்காக இருக்கின்றேன், அல்லாஹ் தடுத்தவற்றை எந்தளவு செய்து கொண்டிருக்கிறேன்? முதலான வினாக்களை எழுப்பி அல்குர் ஆனை பாராயணம் செய்கின்றபோது நிச்சயமாக கண்கள் கண்ணீர் சிந்தும். அந்த நிலையிலும் அவருக்கு கண்ணீர் வரவில்லையாயின் அவர், எனது உள்ளம் இறுகிப் போயிருக்கிறதே! அல்லாஹ்வின் கலாமை ஓதுகின்றபோதுகூட எனக்கு உணர்வு வரவில்லையே! நரகத்தின் வேதனை பற்றி செவிமடுக்கின்றபோதுகூட எனக்கு நடுக்கம் வரவில்லையே! என்று ஆதங்கப்பட்டு அதற்காக கண்ணீர் வடிக்கட்டும்.”
இக்ரிமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓதுவதற்காக அல்குர்ஆனைத் திறந்தால் அல்குர்ஆனை அவரது முகத்தில் வைத்து அழுதவாறு இது எனது இரட்சகனின் வார்த்தை, இது எனது இரட்சகனின் வார்த்தை எனக் கூறியவராக மயக்கமடைந்து விழுந்து விடுவார்கள்.
ஆரம்பகால ஸலபுகள் அல்குர்ஆனின் ஒரு வசனத்தை மீட்டி மீட்டி ஓதி அதன் கருத்தை விளங்குவார்கள். அதனால் ஏற்படுகின்ற தாக்கத்தின் காரணமாக அப்படியே மயக்கமடைந்து விழுந்து விடுவார்கள். இத்தகைய மனிதர்களிட மிருந்து நாம் வாழ்க்கைப் பாடம் கற்க வேண்டும்.
அல்குர்ஆனுடனான உறவில் இன்பம் அனுபவித்த ஸாபித் அல்முகானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
“குர்ஆனை ஓதுவதில் எனக்கு இன்பமிருக்கவில்லை. அல்குர்ஆனைப் பார்ப்பதில் எனக்கு எவ்வித சுவையும் இருக்கவில்லை. இருபது வருடங்களாக அல்குர்ஆனோடு போராடினேன். அதன் பின்பே அல்லாஹ்வின் கலாமோடு இறுக்கமான ஓர் உறவைக் கட்டியெழுப்பினேன். இறுதி இருபது வருடங்களும் குர்ஆனிய இன்பத்தில் நான் மூழ்கினேன்.”
அல்குர்ஆன் இத்தகைய தாக்கத்தையே எமது வாழ்க்கையிலும் ஏற்படுத்த வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“எவர் ஒருவர் குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை பதியப்படும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. அலிப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து என நான் சொல்ல மாட்டேன். அலிஃப் ஓர் எழுத்தாகும் லாம் ஓர் எழுத்தாகும் மீம் ஓர் எழுத்தாகும்.” (அல்புகாரி, அத்திர்மிதி)
ஓர் எழுத்தை ஓதுவதற்கு ஒரு நன்மை எழுதப்பட்டு அந்த ஒரு நன்மை பத்து நன்மையால் அதிகரித்துக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதம் குர்ஆனுக்கு மாத்திரம்தான் தரப்பட்டுள்ளது. உலகத்தில் வேறு எந்த கிரந்தத்திற்கும் நூலுக்கும் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டில்லை.
“நீங்கள் அல்குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு பரிந்துரை செய்யும்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ் சொன்னதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்கிறார்கள்:
“ஒருவர் குர்ஆனை ஓதிக் கொண்டே இருக்கிறார். அதனை ஓதி ஓதி அதன்மீது ஈடுபாடு கொண்டிருக்கின்றமையினால் என்னிடம் கேட்பதற்கு, என்னிடம் முறையிடுவதற்கு அவருக்கு நேரமில்லை. தனது தேவைகளைக்கூட என்னிடம் கேட்க முடியாத அளவுக்கு அவர் அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார். அத்தகையோருக்கு, என்னிடம் கேட்பவர்களுக்கு கொடுப்பதைவிட நான் நிரப்பமாகக் கொடுப்பேன்.” (ஹதீஸுல் குத்ஸி)
அல்குர்ஆனை ஓதுவது மாத்திரமல்ல, அதனை எடுத்துப் பார்த்தல், தொடுதல், சுமத்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை வணக்கமாகக் கருதி நன்மைகள் தருகின்ற மார்க்கம் இஸ்லாம். இது அல்குர்ஆனின் தனிப் பெரும் சிறப்பு. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“அல்குர்ஆனைப் பார்ப்பது வணக்கமாகும்.”
அல்குர்ஆனை கையில் சுமக்காத நிலையில், ஒரு மனிதனால் சுவனம் நோக்கிய பயணத்தைத் துவங்க முடியாது மறுமையில் ஈடேற்றம் பெற முடியாது.
அல்குர்ஆனை ஓதுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அதனை மனனமிட வேண்டும். குர்ஆனிய வசனங்கள், ஸூராக்கள் எமது உள்ளங்களில் வாழ வேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய இந்த எச்ச ரிக்கை கவனத்திற்குரியது.
“எந்த வீட்டில் குர்ஆனின் ஒரு பகுதியேனும் ஓதப்படவில்லையோ அந்த வீடுதான் வீடுகளில் பூச்சியமான வீடு மற்றோர் அறிவிப்பில் வீடுகளில் மிக அற்பமான வீடாகும்.” (இப்னு அபீ ஷைபா)
அல்குர்ஆன் இல்லங்களில் வாழ்வதை விட அது எமது உள்ளங்களில் வாழ வேண்டும் என்பதே நபிகளாரின் எதிர்பார்ப்பு.
“எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் சொற்ப வசனங்கள் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்தார்கள். (அத்திரமிதி)
பாழடைந்த வீட்டில் ஜின்களும் ஷைத்தான்களுமே குடிகொண்டிருக்கும். அங்கு குழப்பமும் குழறுபடியும்தான் தாண்டவமாடும். அங்கு அமைதியும் நிம்மதியும் இருக்காது.
பாழடைந்த வீட்டில் ஜின்களும் ஷைத்தான்களுமே குடிகொண்டிருக்கும். அங்கு குழப்பமும் குழறுபடியும்தான் தாண்டவமாடும். அங்கு அமைதியும் நிம்மதியும் இருக்காது.
மற்றோரு தடைவ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“அல்குர்ஆன் ஓதப்படுகின்ற வீடுகளில் மலக்குகள் நுழைகிறார்கள். அங்கிருந்து ஷைத்தான்கள் வெளியேறி விடுகின்றன. குடும்பத்தின் பரகத் விசாலப்படுத்தப்படுகிறது நலவுகள் அதிகரிக்கின்றன. அல்குர்ஆன் ஓதப் படாத வீடுகளில் ஷைத்தான்கள் நுழைந்து விடுகின்றன. அங்கிருந்து மலக்குகள் வெளியேறுகின்றனர். குடும்பம் நெருக்கடிக்குட்படுத்தப்படுகிறது. அங்கு நலவுகள் குறைவடைகின்றன.”
அல்குர்ஆன் ஓதப்படாத வீடு வெளித் தோற்றத்தில் அழகான, வசதியான, வளமான வீடாக இருக்கலாம். ஆனால், இன்னோரன்ன பிரச்சினைகள், இன்னல்கள், கவலைகள், துன்பங்கள், சர்ச்சைகள், குழப்பங்களால் அந்த வீடு நிம்மதியை இழந்துவிடும். அல்குர்ஆனுடன் எவ்வித உறவுமில்லாதவரிடம் நிறைய பணமிருக்கிறது உயர் ரக வாகனம் இருக்கிறது நல்ல வருமானமும் இருக்கிறது. ஆனால், அந்த வீட்டில் காரணத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
சிறுவர்கள், மாணவர்கள் மாத்திரம்தான் அல்குர்ஆனை மனனம் செய்ய வேண்டும் என்ற வரையறை இஸ்லாத்தில் கிடையாது. அண்மையில் எண்பது வயது மூதாட்டிகூட அல்குர்ஆனை மனனம் செய்து முடித்திருக்கிறார்.
சிறுவர்கள், மாணவர்கள் மாத்திரம்தான் அல்குர்ஆனை மனனம் செய்ய வேண்டும் என்ற வரையறை இஸ்லாத்தில் கிடையாது. அண்மையில் எண்பது வயது மூதாட்டிகூட அல்குர்ஆனை மனனம் செய்து முடித்திருக்கிறார்.
உலகத்தில் எந்த சவால்களுக்கும் முகங்கொடுத்து எல்லா சாதனைகளையும் படைக்க தயாராக முயற்சிக்கும் மனிதர்கள், அல்லாஹ்வின் வார்த்தைகளான அல்குர்ஆனை மனனம் செய்யாமலிருப்பது வேதனையளிக்கிறது.
அரபு மொழியையும் ஏனைய கலைகளையும் ஆழமாகக் கற்றால்தான் அல்குர்ஆனைப் புரிந்து கொள்ள முடியும் என்பது பிழையான கருத்து என்பதுதை பின்வரும் அல்குர்ஆனைப் வசனம் நிரூபிக்கின்றது.
“நிச்சயமாக, நாம் இந்தக் குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்வதற்காகவே இலகுபடுத்தி வைத்திருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (ஸூரதுல் கமர்: 22)
அல்குர்ஆனை விளங்குவதற்காக, அதிலிருந்து நல்லுணர்ச்சி பெறுவதற் காக நாம் இலகுபடுத்தி வைத்திருக்கிறோம். படிப்பினை பெறுபவர்கள் இருக்கிறார்களா? என்று அல்லாஹ் தெளிவாகவே கேட்கும்போது, இந்தக் குர்ஆனை விளங்குவது மிகவும் சிரமாமானது எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை.
“இது, (அல்லாஹ்வின்) வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு இது நேரவழிகாட்டியாகும்” (ஸூரதுல் பகரா: 2) எனச் சொல்லும் அல்லாஹுத் தஆலா,
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியான அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது” (ஸூரதுல் பகரா: 185) எனவும் குறிப்பிடுகின்றான்.
அல்குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட வந்த வேதம். பயபக்தியுள்ள மனிதர்களுக்கு இது விஷேடமாக வழிகாட்டும். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் இறக்கியருளப்பட்டதனால் குர்ஆனுக்கும் நோன்புக்கு மிடையாலான தொடர்பு மிகவும் இறுக்கமானது.
நோன்பின் நோக்கம்,ளசூஹூசூளஹுசூச்ண்ஹ் சூஹுசூஞ்ண்சீசூ தக்வாவை வளர்ப்பதாகும். அல்குர்ஆனின் நோக்கம், நண்டீணர் ளரிளஹ்ண்ஹுசூஞ்ரிகூசூ தக்வா உள்ள மனிதர்களுக்கு நேர்வழியைக் கொடுப்பதாகும்.
நோன்பின் நோக்கம்,ளசூஹூசூளஹுசூச்ண்ஹ் சூஹுசூஞ்ண்சீசூ தக்வாவை வளர்ப்பதாகும். அல்குர்ஆனின் நோக்கம், நண்டீணர் ளரிளஹ்ண்ஹுசூஞ்ரிகூசூ தக்வா உள்ள மனிதர்களுக்கு நேர்வழியைக் கொடுப்பதாகும்.
எனவே, ரமழானுக்கூடாக தக்வாவைப் பெற்று இந்த தக்வாவிற்கூடாக அல்குர்ஆனின் நேர்வழியைப் (ஹிதாயத்) பெறக் கூடியவர்களாக நோன் பாளிகள் மாறுகின்றபோதுதான் இந்த ரமழான் அர்த்தமுள்ள ரமழானாக இருக்கும். வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பதில் எவ்வித பயனும் கிடையாது.
அல்குர்ஆன் மிகவும் அற்புதமானது. அதனை எளிதில் மனனமிட முடியும். ஏழு வயது குழந்தைகள்கூட குர்ஆனை மனனமிட்டிருக்கிறார்கள்.
என அழைக்கப்படுகின்ற பிரித்தானியக் கலைக் களஞ்சியம் அல்குர்ஆனுடன் தொடர்பான இரு பெரும் உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறது.
01. உலகில் அதிகமானோர் வாசிக்கின்ற ஒரு நூல் அல்குர்ஆன்.
02. பெருந்தொகையாக மக்கள் மனனமிடுகின்ற ஒரு நூல் அல்குர்ஆன்.
02. பெருந்தொகையாக மக்கள் மனனமிடுகின்ற ஒரு நூல் அல்குர்ஆன்.
எனவே, குர்ஆனை ஓதுவது கஷ்டமென்றோ அதனது கருத்துக்களை கிரகிப்பது சிரமசாத்தியமானது என்றோ எவரும் வாதிட முடியாது. எல்லோ ருக்கும் அந்தந்த தரத்தில் அல்குர்ஆன் வழிகாட்ட வல்லது.
தனி மனித, குடும்ப, சமூக வாழ்க்கைக்கும் நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.
அல்குர்ஆனுக்கு நடைமுறை உதாரணமாகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை அணுவணுவாகப் பின்பற்ற வேண்டும். அல்குர்ஆன் கோட்பாடு என்றால், ஸுன்னா செயல்முறை. அவை இரண்டும் எமது இரு கண்கள்.
நபித் தோழர்கள் அல்குர்ஆனுடன் எத்தகைய உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி விவரிக்கிறார்கள்.
நபித் தோழர்கள் அல்குர்ஆனுடன் எத்தகைய உறவைக் கொண்டிருந்தார்கள் என்பதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி விவரிக்கிறார்கள்.
“நபித் தோழர்களாகிய நாம், முதலில் பத்து வசனங்களை ஓதுவோம். பின்னர் அப் பத்து வசனங்களையும் விளங்குவோம். அவை எமது வாழ்வில் எதனை எதிர்பார்க்கின்றன என்பதைப் பார்த்து அவ் விடயங்களை எமது வாழ்வில் கடைப் பிடிப்போம். அதன் பிறகுதான் அல்குர்ஆடைய ஏனைய வசனங்களைக் கற்றுக் கொள்வோம்.”
யுத்த களத்தில் படைத் தளபதியின் கட்டளை வரும் வரை காத்திருக்கின்ற படைச் சிப்பாய் எப்படி தயார் நிலையில் இருப்பாரோ அவ்வாறே ஸஹா பாக்கள் அல்குர்ஆனைக் கற்று நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருந் தார்கள். ஓர் அல்குர்ஆன் வசனம் இறங்கி விட்டால் அடுத்த கணப்பொழுதே அதனை அமுல்படுத்தினார்கள். மதுபானம் தடைசெய்யப்பட்ட வசனம் இறங்கியபோது மதுப் பீப்பாய்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்கள். மதுபானம் பாதையில் ஆறாக ஓடியது.
ஹிஜாப் பற்றிய வசனம் இறங்கியபோது ஸஹாபா பெண்மணிகள் மறுகணமே தாம் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தலையையும் மார்பகங்களையும் மறைத்துக் கொண்டார்கள்.
ஹிஜாப் பற்றிய வசனம் இறங்கியபோது ஸஹாபா பெண்மணிகள் மறுகணமே தாம் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தலையையும் மார்பகங்களையும் மறைத்துக் கொண்டார்கள்.
இவ்வாறுதான் ஸஹாபாக்கள் அல்குர்ஆனை அணுகினார்கள்.
மறுபக்கம், குர்ஆனை ஓதி அதன் கருத்துக்களை விளங்கி அதற்கு மாற்றமாக நடந்து கொள்பவர்களை அல்குர்ஆன் சபிக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
மறுபக்கம், குர்ஆனை ஓதி அதன் கருத்துக்களை விளங்கி அதற்கு மாற்றமாக நடந்து கொள்பவர்களை அல்குர்ஆன் சபிக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
“பலர் அல்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால், அது அவர்களை சபித்துக் (லஃனத்) கொண்டிருக்கிறது.”
“அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.” (ஸூரதுல் ஹூத்: 18)
அநியாயம் இழைத்த நிலையில் மேற்சொன்ன இந்த வசனத்தை ஓதும் ஒருவர், தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார்.
“பொய்யர்களுக்கு அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்” (ஆலு இம்ரான்: 61) என்ற வசனத்தை ஓதும் ஒருவர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளவில்லை யாயின், அவரும் தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார்.
குர்ஆன் வெறுமனே பரகத்துக்காக திலாவத் செய்யப்படுகின்ற ஒரு வேத நூல் அல்ல. அது முழு மனித வாழ்வுக்கும் வழிகாட்ட வந்த வேதம். காலம் முழுக்க வழிகாட்ட வந்த வேதம் இது.
இது ரமழான் மாதத்தில் மாத்திரம் சுமக்கப்படுவதல்ல ஜனாஸா வீட்டில் மாத்திரம் ஓதப்படுவதல்ல என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, இன்று நாடு முழுவதிலும் அல்குர்ஆன் வகுப்புக்கள், அல்குர்ஆன் விளக்க மஜ்லிஸுகள் நடத்தப்பட வேண்டும். இந்த நாட்டிலுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிம்கள் அந்தப் பொறுப்பை சுமக்க வேண்டும். இந்த நாட்டில் வாழ்கின்ற இருபது இலட்சம் மக்களுக்கும் அல்குர்ஆன் விடுக்கும் தூதை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இவைதாம் அல்குர்ஆன் இறக்கியருளப் பட்ட ரமழான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமைகள்.