ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (2)
http://sukrymuhajiree.blogspot.com/2016/04/2.html
"எவர் ஒரு நம்பிக்கையாளருக்கு இவ்வுலகில் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஒரு துன்பத்தை நீக்கி வைக்கின்றாரோ அவருக்கு மறுமை நாளில் ஏற்படும் துன்பத்தை அல்லாஹ் நீக்கி வைப்பான்" என்றும்,
"எவர் துன்பத்திற்குள்ளானவருக்கு நலன் நல்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நலன் நல்குவான்" என்றும்,
"எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைத்து வைக்கின்றாரோ அவருடைய மானத்தை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகிறான்" என்றும்,
"ஒருவன் தன் சகோதரனுக்கு உதவி புரிந்து வரும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி புரிந்து வருவான்" என்றும்,
"எவர் கல்வி பெறுவதற்காக வழி நடக்கின்றாரோ அவருக்குச் சுவனத்தின் வழியை அல்லாஹ் இலேசாக ஆக்கி விடுகிறான்" என்றும்,
"எந்தக் கூட்டத்தினராவது இறை இல்லங்களுள் ஒன்றில் கூடி இறைவனின் (திரு)மறையை ஓதிவருவதுடன், அவர்களில் ஓதத்தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு ஆறுதலும், மனத்திடமும் இறைவன் புறத்திலிருந்து நல்கப்படுகிறது" என்றும், "இறை அன்பு அவர்களுக்கு நிழலிடுகிறது" என்றும், வானவர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர்" என்றும், இறைவனும் தன்னுடன் இருப்பவர்களிடம் அவர்களைப்பற்றிக் கூறுகின்றான்" என்றும்,
"எவரையும் அவருடைய செயல் பின்னுக்குத் தள்ளிவிட்டால் அவர் தம் (உயர்)குலத்தின் காரணமாக முன்னேறிவிட முடியாது (சுவனபதி செல்ல முடியாது)" என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதீ (இங்கு இடம்பெற்றுள்ள வாசகம் முஸ்லிமில் உள்ளது)