பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

Image result for ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்திற்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு, அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாட்களை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. ”மாதம் முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

Related

islamic attical 3755109035251235802

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item