பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
http://sukrymuhajiree.blogspot.com/2016/05/blog-post_31.html
பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
1. பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி ஜமாஅத்துடன் கடமையான தொழுகையை தொழாமல் பள்ளியிலிருந்து வெளியேறுவது இஸ்லாமிய ஒழுக்கங்களைச் சார்ந்ததல்ல.
. 1521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
2. பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
470- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ فَجِئْتُهُ بِهِمَا قَالَ مَنْ أَنْتُمَا ، أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. بخاري
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித் தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இரு வரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர் களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .
3 விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
1081 – حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِى الْمَسْجِدِ وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلاَةِ يَوْمَ الْجُمُعَةِ.ابو داود
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்கு வதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார், நூல்: அபூ தாவூத் 1081.
4. பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
415- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : حَدَّثَنَا قَتَادَةُ قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا.مسلم
பள்ளியில் காரி உமிழ்வது பாவம் அதற்கு பரிகாரம் அதைப் பொதைத்து விடுவ தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் கூறினார்கள். புகாரி 415, முஸ்லிம் 1259.
5. பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொலை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.
1282 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِى عَطَاءٌ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الثُّومِ – وَقَالَ مَرَّةً مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ.مسلم
இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் – மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள். முஸ்லிம் 1282.
6. பள்ளிக்குள் செல்பவர் பள்ளியின் காணிக்கையான இரண்டு ரகஅத்துகளை தொழுது விட்டு அமர்வது சுன்னத்தாகும்
444- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ.بخاري
உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள்.புகாரி 415.