தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்..!


Image result for தொழுகை PHOTOS

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103) 

ஆனால், இவர்களுக்குப் பின் வழி கெட்ட சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்;  இழிவான மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்; மறுமையில் அவர்கள் நரகத்தின் கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, பாவங்களிலிருந்து விலகி ஈமான் கொண்டு, ஸாலிஹான – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய ஸாலிஹானவர்கள்; ஜன்னத்தில் – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; அவர்கள் அடைய வேண்டிய நற்பயன் எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)
இன்னும், கவனமற்ற தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாகவும், அசிரத்தையாகவும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.
இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ என்று கேட்பார்கள். அவர்கள் பதில் கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘வீணானவற்றில் மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான மரணம் எங்களிடம் வரும்வரையில் இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர். (அல்-குர்ஆன் 74:42-47)  
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.(அல்குர்ஆன் 30:31)
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)
யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)
தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: ‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)
‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் அவர்கள் வரம்பு மீறனாலே தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.   
(ஆதாரம்: புகாரி)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

Post a Comment

emo-but-icon

Pages

Hot in week

islamic attical

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item